Subscribe Us

பாகிஸ்தான் பரிதாபம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், பாகிஸ்தானும் எதிர்கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் தனது தொடக்க லீக்கில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணி 76 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் தங்களது முதலாவது வெற்றிக்காக இவ்விரு அணிகளும் களமிறங்கின. போட்டியில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்திடம் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் கையே ஓங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து விளையாடியது. அயர்லாந்திடம் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுமித், கெயில் ஆகியோர் பெரும் ஏமாற்றத்தையே அளித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சோகில் கான், முகமது இப்ரான் பந்துவீச்சில் அவர்கள் அவுட் ஆனார்கள். சுமித் 23 ரன்களிலும், கெயில் 4 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களுமே நிதானமாக, தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ரன்சேர்க்கும் முனைப்புடன் விளையாடினர்.

பிராவோ 49 ரன்களில் காயம் காரணமாக போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். சாமுவேல் 38 ரன்களிலும், ராம்தீன் 51 ரன்களிலும், சிம்மோன்ஸ் 50 ரன்களிலும் (ரன் அவுட்), சம்மி 30 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ரூஸ்செல் 42 ரன்களில் அவுட் ஆகாமல் இறுதியில் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 310 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு 311 ரன்கள் அடித்தால் வெற்றி என வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
 
இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய பாகிஸ்தான் பெரிதும் சொதப்பியது. பாகிஸ்தான் எந்தஒரு அணியும் உலககோப்பை போட்டியில் சந்திக்காக ஏமாற்றத்தை சந்தித்தது. பாகிஸ்தான் வெறும் ஒரு ரன் அடித்திருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக, நடையை கட்டினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சம்மாளிக்க முடியாமல் நாசீர் ஜாம்செட் ரன்எதுவும் எடுக்காமலும், அகமது ஒரு ரன்னிலும், யுனிஸ்கான் ரன்எதுவும் எடுக்காமலும், சோகையில் ரன்எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். 

பாகிஸ்தான் ஒருரன்னில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 3.1 ஓவர்களிலே 4 விக்கெட்களை பாகிஸ்தான் இழந்தது. இதன்மூலம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் குறைந்த ரன்களில் 4 விக்கெட்களை பறிகொடுத்த பட்டியலில் கனடாவை, பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளியது. குறைந்த ரன்னில் 4 விக்கெட்களை இழந்த அணியாக இதுவரையில் கனடா இருந்தது. கடந்த 2006 -ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் கனடா 4 ரன்கள், எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்களை பறிகொடுத்து பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது பாகிஸ்தான் அந்த இடத்தை பிடித்துள்ளது. 

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்று இறங்கிய மிஷ்பாவும் 7 ரன்களில், ரூஸ்செல் பந்துவீச்சுக்கு அடிபணிந்தார். கெயிலிடம் கேட்ச் கொடுத்து வெகுவாக வெளியேறினார். அவருடன் இணையாக விளையாடிய சோகைப் மசூத்துடன், உமர் அக்மல் களமிறங்கினார். உமர் அக்மல், சோகைப் மசூத் பாகிஸ்தானின் ரன் கணக்கை எப்படியாவது 100-யை தாண்ட செய்ய வேண்டும் என்று விளையாடினார். அதற்கு பலன் கிடைத்தது. இருவரும் அரைசதம் அடித்து அவுட் ஆனார்கள். அப்ரிடி ஆட்டம் இன்றும் பலிக்காமல் சென்றுவிட்டது. வெறும் 28 ரன்களிலே, அவுட் ஆகி ஜகா வாங்கினார். இதனையடுத்து களமிறங்கி வீரர்களும் சொற்ப ரன்களிலே அவுட் ஆகி நடையை கட்டினர்.  

தற்போது பாகிஸ்தான் அந்நிலையை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நிலவரம் இப்போது வெளியாகிவிட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்கள் மீது பெரிதும் ஆத்திரத்தில் உள்ளனர். ஏற்கனவே அணியின் கேட்பன் உல் ஹக் அணியின் பேட்டிங் மிகவும் கவலை அளிப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கத்துக்குட்டியிடம் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் உலக கோப்பை வெற்றியாளர் பாகிஸ்தானை பந்தாடியுள்ளது. பேட்டிங்கில் அசத்திய ரூஸ்செல் பாகிஸ்தானின் முக்கியமான விக்கெட்களை எடுத்தார். ரூஸ்செல் மேன்-ஆப்-தி மேட்ச்  வென்றார். டெய்லர் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 3 பேரது ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பென் 2 விக்கெட்களையும், ஹொல்டர், சம்மி தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர். 

பாகிஸ்தான் அணி இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து  பி பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியின் காலிறுதி கனவு நினைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாகிஸ்தான் வீரர்களை, ரசிகர்கள் வரிந்துகட்டி சாடிவருகின்றனர்.  

Post a Comment

0 Comments