தன்னிடம் உள்ளதாக கூறிய ஹெலிகொப்டர் மற்றும் லம்போகினி தற்பொழுது எங்கே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தல் மேடைகளில் என்னிடம் ஹெலிகொப்டர், லம்போகினி கார்கள் உள்ளதாக கூறினார்கள்.
அவர்கள் கூறியது போன்று நான் ஹெலிகொப்டர் வைத்திருந்திருந்தால் அவற்றினை வைப்பதற்கு ஒரு இடம் இருக்க வேண்டும்.
அப்படியான குற்றங்களை சுமத்தியவர்கள் தற்பொழுது கற்களால் அடிக்கப்பட்ட நாய்கள் போல் ஆதாரங்களின்றி நிற்கிறார்கள்.
லம்போகினி வைத்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு லம்போகினி தயாரிக்கும் நிறுவனங்களில் விசாரணை செய்தால் அவர்கள் பதிலளிப்பார்கள் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


0 Comments