Subscribe Us

header ads

பயணிகள் விமாணத்தில் ஜனாதிபதி மைத்திரியின், முதலாவது வெளிநாட்டு பயணம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர்.

ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி நாளை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படவுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ளார்.




Post a Comment

0 Comments