ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய குறித்த கட்சிகள் அனுமதிக்கக் கூடாது என கண்டி மல்வத்து பீடாதிபதி ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னுதாரணமான தலைவர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்வதனால் இனி வரும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறாது என மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ஊழல் மோசடிகள், கொள்ளைகள், சண்டித்தனங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.
பெற்றோலிய வள ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார நேற்று மல்வத்து பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது, இந்தக் கருத்தக்கள் வெளியிடப்பட்டன.


0 Comments