Subscribe Us

header ads

ரிஷாத், ஹக்கீமுக்கு அரசியல் இருப்பை பாதுகாத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தேன் – ராஜித


தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மால் ரண்ஜித் தேவசிறி, தேசிய ஷூரா சபையின் ஊடகப் பேச்சாளர் ஜாவித் யூசுப், இலங்கை மலாய் சம்மேளன தலைவர் டீ.கே. அஸூர் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உரை :
கடந்த இரண்டு வருடத்திற்குள் அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது. அவர்களது கலை கலாச்சார அமைச்சங்களில் உட்புகுந்து இம்சைப்படுத்தினார்கள். இந்த விடையங்களை கவனிப்பதற்காகவே இந்த தேசிய ஷூரா சபை உருவாகியது என நான் நினைக்கிறேன்.
தற்போது அந்த இருண்ட ஆட்சி முடிந்து விட்டது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும், தமது மதக்கடமைகளை சுதந்திராகமாகவும், எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க முடியும். இந்த நாட்டின் வாழும் 4 சமூகங்களும் ஐக்கியமாகவும், சமாதானமாகவும் வாழ முடியும்.
சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன :

முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது பெண்களை கொண்டு வரவில்லை அவர்களது முதலாவது கப்பல் எனது தொகுதியான பேருவளையில் தான் வந்து இறங்கியது. அவர்கள் முதலில் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்தார்கள். அகவே உங்களது உடம்புகளில் சிங்கள இரத்தமும் கலந்துள்ளது. எனவே நீங்கள் எங்களின் சகோதரர்கள்.
எனது பேருவளைத் தொகுதியில் 31 வீதம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். நகரங்களில் 81வீதம் வாழ்கின்றனர். அவர்களது வாக்குகளைக் கொண்டு கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்குகளை அதிகரித்துக் கொடுத்தேன்.
இன்றும் பேருவளை மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். மைத்திரியின் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம்கள் 95 வீதமும் தமிழர்கள் 85வீதமும் வாக்களித்துள்ளனர். முஸ்லிம் கட்சித் தலைவர்கள் வருவதற்கு முன்னமே முஸ்லீம்கள் மைத்திரியுடன் இணைந்து விட்டனர். அதன் பின்பே தலைவர்கள் வந்து மைத்திரியிடம் இணைந்தார்கள். அதற்காகவே நான் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹக்கீமிடன் மஹிந்தவிடமிருந்து அகன்று வாருங்கள், உங்களது இருப்புக்களை பாதுகாக்க மக்களோடு மக்களாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என அன்று கோரிக்கை விடுத்தேன். (ஸ)
– அஸ்ரப் ஏ சமத் -

Post a Comment

0 Comments