| தமிழ்நாட்டில் உள்ள "அம்மா" உணவகங்கள் வெற்றியடைந்ததையடுத்து, கர்நாடகாவிலும் இந்த திட்டத்தினை துவக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. |
| தமிழகத்தின் அம்மா உணவகங்களைப் போன்று கர்நாடகாவிலும் அண்ணா உணவகம் என்ற பெயரில் துவங்க, கர்நாடக திட்டக்கழக துணை தலைவர் சி.எம்.இப்ராஹிம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் இப்ராஹிம் கூறுகையில், இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய சித்தராமைய்யா அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, 5 இட்லிகளை கொண்ட ஒரு தட்டு ரூ.5க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது தவிர உப்மா, சித்ரன்னம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவனவும் ரூ.5க்கு வழங்கப்படும். இந்த உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். இந்த பரிந்துரையை அரசு தற்போது ஏற்றுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பெங்களூருவில் 20 இடங்களில் அண்ணா உணவகங்கள் திறக்கப்பட உள்ளது. மேலும், இந்த உணவகங்கள் ஏழை மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் ஆகியவற்றி்ற்கு அருகில் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். |


0 Comments