ஒற்றுமையைப் பேசி
வேற்றுமையில் வாழ்பவர்கள்
வேண்டாம்
புகைத்துப் புகைத்தே
பகட்டாய்ப் பேசுபவர்கள்
வேண்டவே வேண்டாம்
புதுப் புதுப் பெயர்களில்
போதைப் பொருள் வேண்டாம்
மதிகெட்டுத் திரியும்
மக்கள் வேண்டாம்
இடங்கொடுத்தோமெனச் சொல்லி
குத்திக் காட்டும் மனிதம்
வேண்டாம்
படித்தாரை அவமதிக்கும்
பாமரத் தன்மை வேண்டாம்
ஆசானைத் தாக்கும்
மாணவன் வேண்டாம்
தலைக் கவசம் அணியாமல்
மோட்டார் வண்டி ஓட்டுபவர்
வேண்டாம்
மகளைப் பெற்ற அப்பாக்கள்
வீடு கட்டிக் கட்டியே
தேய்ந்து போக வேண்டாம்
கூத்துக் கும்மாளங்களில்
மூழ்கிக் கிடப்பவர் வேண்டாம்
மகளிர் பாடசாலை விடுகையில்
பாதை முழுக்க இளைஞர்கள்
வேண்டாம்
கொலை செய்யும் எண்ணம்
யாருக்கும் வேண்டாம்
விளையாட்டு வெற்றியாகி
சன்டையிலே முடிய வேண்டாம்
மார்க்கத்தில் பிணக்கு வேண்டாம்
இஸ்லாம் சொல்லாத
கொண்டாட்டங்கள் வேண்டாம்
தொழுகை மறந்த
சமூகம் வேண்டாம்
குர்ஆன் ஓதப்படாத
வீடுகள் வேண்டாம்
#எதிர்பார்ப்புகளுடன்
Nusry Ibn Rahmathullah


0 Comments