தன்னை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஜனநாயகக் கட்சி தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இராணுவ நீதிமன்றில் தன்னை குற்றவாளியாக அறிவித்தபின் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டதாக சரத் பொன்சேனா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து தான் விடுதலை பெற்றுள்ள நிலையில் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மீள வழங்கப்படவில்லை என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் தன்னை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு கோரி உத்தரவு பிறப்பிக்கும்படி சரத் பொன்சேகா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த கெட்டகொடவின் நியமனத்தை இரத்து செய்யுமாறும் அவர் கோரியுள்ளார்.
0 Comments