Subscribe Us

header ads

இமைகள் கண்களை எப்படி காக்கின்றன?


இமைகள் எப்படி கண்களைப் பாதுகாக்கின்றன என்பது குறித்த புதிரை விஞ்ஞானிகள் விடுவித்துள்ளனர்.
மிகநீண்ட காலமாக இமைகள் கண்களுக்குள் தூசிகள் போவதைத் தடுக்கும் ஒரு வடிகட்டியாகவே கருதப்பட்டது.
ஆனால் மனிதர்கள் உட்பட 22 பாலூட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள், இமைகளின் செயல்பாடு தொடர்பில் புதிய தகவல்களை அளித்துள்ளன.
கண்களின் மேற்பரப்பில் காற்று நேரடியாக வீசுவதை இமைகள் தடுத்து, அதை திசைமாற்றி விடுகின்றன என்று அமெரிக்க ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் ஆய்வு நடத்தப்பட்ட பாலூட்டிகள் அனைத்திலும், இமைகளின் நீளமானது, கண்களின் அகலத்தில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விகிதமானது எவ்விதமான தடையும் இன்றி, அதிகபட்ச பாதுகாப்பை அளித்து பார்வை தெளிவாகத் தெரிய உதவுகிறது என்று இந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு எதிர்வரும் காலத்தில் ஓளி உணர்வுத் தொழில்நுட்பத்தின் புரிதலுக்கு மேலும் உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.a

Post a Comment

0 Comments