Subscribe Us

header ads

‘அகர ஆயுதம்’ எனும் இலக்கியச் சந்திப்பு

பி. முஹாஜிரீன்


‘அகர ஆயுதம்’ எனும் இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொது வெளி நடாத்திய கவியரங்கும் உரையாடலும் நிகழ்வு சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஷ் வித்தியாலயத்தில் இன்று (28) சனிக்கிழமை நடைபெற்றது.

மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட இலக்கியவாதிகளான கவிஞர்களான ஆசுகவி அன்புடீன், பாலமுனை பாறூக், எஸ். முத்து மீரான், கிண்ணியா அமீர் அலி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு கவி நயத்துடனான கருத்துப் பரிமாறல்களை வழங்கினர்.

கவிஞர் நவாஸ் சௌபி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில் ஆகியோர்  இலக்கியப் படைப்பாளிகளும் அவர்களது போக்குகளும், எதிர்காலத்தில்  எழுத்தாளர்கள் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய விடயங்களும் தொடர்பில் கருத்துரை வழங்கியதுடன் பல்துறைக் கவிஞர்கள் பங்குபற்றிய கவியரங்கும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களும் கவிஞர்களும், கலைஞர்களும் அகர ஆயுதம் ஏற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments