Subscribe Us

header ads

பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை (PHOTOS)


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன ஜக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி பத்து இலட்சம் கையொப்பங்களை பெறும் நிகழ்வு இன்று நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை நகரில் ஆரம்பமானது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு இன்று கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது அங்கு கூடியிருந்த சிலர் கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.








Post a Comment

0 Comments