இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வானது, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறுகின்றது. இதனையொட்டி, பாராளுமன்ற மைதான சுற்று வட்டப் பாதைகளின் போக்குவரத்து காலை 6 மணிமுதல் 11 மணிவரை மட்டுப்படுத்தப்படும்.
அந்தவகையில் இலங்கை-ஜப்பான் நட்புறவு பாதை, பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள வீதி, பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கான வீதி, கிம்புலவல சந்தியிலிருந்தான வீதி, பெலவத்த சந்தி, பலாந்துன சந்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கான வீதி ஆகியவற்றின் போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.-ET-


0 Comments