Subscribe Us

header ads

புகைப்படங்களை உடனடியாக அச்சிடுவதற்கு உதவும் ஸ்மார்ட்போன் கேஸ்


புகைப்படங்களை உடனடியாக அச்சிடக்கூடிய அச்சு இயந்திரம் போன்று செல்லிடத் தொலைபேசிகளை மாற்றக்கூடிய செல்போன் கவரை அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது.


Prynt என பெயரிடப்பட்ட இந்த செல்போன் கவரை ஸ்மார்ட்போன்களில் பொருத்தினால் உடனடியாக புகைப்படங்களை அச்சிட முடியும். 

தற்போது செல்லிடத் தொலைபேசிகளிலேயே பெரும்பாலானோர் படம் பிடிக்கின்றனர்.

அவற்றை அச்சிடுவதற்கு பதிலாக பேஸ்புக், இன்ஸ்கிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்கே பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 

எனினும் புகைப்படங்களை உடனடியாக  அச்சிடுவதுக்கு பலர் விரும்பக்கூடும் என Prynt நிறுவனம் நம்புகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த சாதனம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments