தேசிய ஔடத சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற நிலையில் விரைவில் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மருந்துக்கான விலைக்குறைப்பு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்திற்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக வரவு செலவு திட்டத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மருந்து கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமையினால் மருந்து கடத்தலில் ஈடுபடுபவர்களினால் மருந்து தட்டுப்பாடு ஏற்படல், மருந்து விலையை அதிகரித்தல், தரமற்ற, தரமான மருந்துகளை இனங்கண்டு விநியோகித்தல் உள்ளிட்ட ஊழல்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


0 Comments