Subscribe Us

header ads

ஒரு தொகுதிக்கு 330 புதிய வீடுகள் - சஜித் பிரேமதாச


ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவுமுள்ள தேர்தல் தொகுதிகளிலும் புதிதாக 330 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 5 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், அவற்றில் 5 ஆயிரம் வீடுகளுக்காக வீடொன்றிற்கு 75 ஆயிரம் ரூபா வீதம் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திவிநெகும செயற்திட்டத்தின் கீழ் பொருள் நிவாரணம், தொழிநுட்ப நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 2 வீத நிவாரண வட்டியில் 15 வருடத்திற்கு செலுத்தும் வகையில் ஒரு லட்சம் ரூபா கடனுதவி வழங்கி ஒரு இலட்சம் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசின் அனுசரணையில் நாடு பூராகவும் 50 ஆயிரம் வீடுகளையும், தனியார் துறையின் அனுசரனையில் 50 ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments