அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்காக வழங்கப்படவுள்ள 20ஆயிரம் ரூபாய் ஊட்டச்சத்து சலுகைக்கு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக உலக வங்கி 800 கோடி ரூபாய் ஒதுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தினுள் பொருளாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் சகல கர்ப்பிணி தாய்மார்களுக்காக மருத்துவ பரிந்துரைகளின் படி பணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் முதற் கட்ட பணியை மாவட்ட ரீதியாக நடைமுறை படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக உலக வங்கி ஒதுக்கிய பணத்தில் ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.


0 Comments