Subscribe Us

header ads

கிணறுகளை புனர்நிர்மாணம் செய்வதிலும் ஊழல் மோசடி பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு


முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கிண­று­களை புனர்­நிர்­மாணம் செய்­வதில் ஊழல் செய்­துள்ளார். ஒரு கிண­றுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த மோச­டிக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் கொள்கை திட்­ட­மிடல் பிரதி அமைச்சர் ஹர்­ஷ­ டீ­ சில்வா தெரி­வித்தார்.

அதே­போன்று முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சர்­வ­தே­சத்தின் நாணய நிதி­யத்தின் பிர­தா­னி­யொ­ரு­வ­ருடன் செய்து கொண்ட ஒப்­பந்தம் தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டின்­போதே பிரதி அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;
முன்­னைய அர­சாங்­கத்தில் பல துறை­களில் ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றன. பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் தலை­மையின் கிழேயே குறித்த மோச­டிகள் இடம்­பெற்­றன.இதற்­க­மைய முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கிண­று­களை புன­ர­மைப்­ப­தற்­காக நிதி ஒதுக்­கீடு செய்து பல கோடிக்கணக்­கான பணத்தை கொள்­ளை­யிட்­டுள்ளார்.இதன்­படி ஒரு கிணற்றை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு 5 இலட்சம் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கிண­றொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு கூட இவ்­வ­ளவு பணத் தொகை தேவைப்­ப­டாது. வீணான முறையில் இவ்­வாறு பணம் விரயம் செய்து மோசடி செய்­துள்ளார்.
நிதி அமைச்­ச­ரிடம் இருந்த கோவகள் தொலைந்து போனாலும் என்­னிடம் கோவைகள் உள்­ளது. குறித்த மோச­டியில் விசேட­மான விடயம் என்­ன­வெனில் பொது கிண­று­க­ளுக்கு அப்பால் தனியார் சில­ரது கிண­று­களும் இத­னூ­டாக புனர் நிர்­மாணம் செய்­வ­தற்கு நிதி ஒதுக்­கி­டப்­பட்­டுள்­ளது. எனவே, குறித்த கிணறு ஊழல் மோசடி தொடர்பில் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுப்போம்.
அதே போன்று முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்இ சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் பிர­தா­னி­யொ­ரு­வ­ரான டி.எஸ்.கே. உடன் தனிப்­பட்ட ரீதியில் ஒப்­பந்தம் ஒன்றில் கைச்­சாத்­திட்­டுள்ளார்.
அத்­தோடு இந்­திய சினிமா நட்­சத்­திர கொண்­டாட்ட நிகழ்வுஇ பொது நல­வாய விளை­யாட்டு போட்டி இலங்­கையில் நடத்­து­வது தொடர்பாக ஏற்பாடுகளுக்கான செலவினை மத்திய வங்கியே ஏற்று கொண்டது. எனவேஇ இது தொடர்பான அனைத்து மோசடிகள் குறித்து விசாரணை செய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.

Post a Comment

0 Comments