Subscribe Us

header ads

ஒரு ஓவரில் 6 சிக்சர் விளாசிய சாதனை வீரர் கிப்ஸ் (வீடியோ இணைப்பு)


உலகக்கிண்ண நினைவுகள்

உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்சின் வாணவேடிக்கையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
ஒரே ஓவரில் 6 பந்துகளும் சிக்சராக மாறிய அதிசயம் 2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் நடந்தது.
பலமான தென் ஆப்பிரிக்கா அணி, ‘கத்துக்குட்டி’ நெதர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி அதிவிரைவாக ஓட்டங்கள் சேர்த்தது.
இந்தப் போட்டியின் 30வது ஓவரை நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் டான் வன் பன்ஜ் வீசினார். இவரது ‘சுழலை’ மிக எளிதாக சமாளித்த கிப்ஸ், அனைத்து பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார்.
இதன் மூலம் ஒரு ஓவரில் 6 சிக்சர் (36 ஓட்டங்கள்) விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மழை காரணமாக, 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 353 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.


Post a Comment

0 Comments