-Nazlan-
உலக கிண்ண கிரிகட் போட்டிகள் நெருங்கி வரும் இந்த வேளையில் இது ஒரு முக்கியமான விடயமாக இருக்கும் என்று கருதியே இந்த பதிவு எழுதப்படுகிறது யாரையும் தாக்கவோ காயபடுத்தவோ அல்ல!
பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்துவரும் எமது முஸ்லிம் சமூகம், நாட்டுப்பற்று விடயத்திலும் சரி நாட்டின் முன்னேற்றத்திலும் சரி அதிக அக்கறை கொண்ட சமூகம் என்பதை யாரும் மறுக்க முடியாது அப்பெயரை விட்டு சென்ற எமது மூதாதையரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
இது இப்படி இருக்க கடந்த 20-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எமது சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் இடையில் ஒரு தர்மசங்கடமான நிலையை தோற்றுவித்தது இந்த கிரிகட் போட்டிகள் , காரணம் எமது சகோதரர்கள் பலர் கிரிகட் போட்டிகளின் போது தாய் மண்ணை விடுத்து பாகிஸ்தான் அணியின் விளையாட்டை அதிகம் ரசித்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு மோசமான நோய்க்கு ஆளானார்கள்.
இதற்கான காரணங்கள் அக்கால கட்டங்களில் அதிகம் இருந்தது,
1. பாகிஸ்தான் கிரிகட் அணி ஆரம்ப கால கட்டங்களில் (1990-1998) மிக சிறந்த அணியாக வலம்வந்தது!
2. இலங்கை அணி கிரிக்கட்டில் சாதிக்கும் முன்பு பாகிஸ்தான் கிரிக்கட்டில் அதிகம் சாதித்து இருந்தது!
3. பாகிஸ்தானியர்கள் இஸ்லாமியர்களாக இருந்தது!
4. இலங்கை அணியில் முஸ்லிம் வீரர்களுக்கு குறைவாகவே இடம் கிடைத்தது!
5. கடந்த 20 வருடங்களாக இலங்கை அரசியலில் முஸ்லிம்கள் விரும்பும்பாத ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது ( அப்படி இருக்கும் போது ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அனைத்தையும் எதிர்ப்பது மனித இயல்பு)
6. பாகிஸ்தான் கிரிகட் வீரர்கள் நடிகர்களை போன்று நல்ல ஸ்மார்ட் ஆக இருந்தார்கள் இதனாலும் ஈர்க்கப்பட்டிருக்கலாம்!
(இப்படி பல்வேறு காரணங்களால் எம்மில் பலர் பாகிஸ்தான் அணியின் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள்)
என்னதான் நியாயமான காரணங்களாக இருந்தாலும் இதை எமது பெரும்பான்மை சமுதாயம் துளியும் விரும்பாது என்பது மட்டும் கசப்பான உண்மை, மேலும் இப்படி முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுப்பதை பெரும்பான்மை சமுதாயம் விளங்காமல் இல்லை என்பதையும் மனதில் கொள்ளவும்
இப்படி சொந்த நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டிற்கு ஆதரவு கொடுப்பது இஸ்லாத்தில் கூட அனுமதிக்காத ஒன்று தான், என்றாலும் இது ஒரு விளையாட்டு தானே என்று பார்த்தால் எந்த ஒரு அணிக்கும் ஆதரவு கொடுப்பது என்பது அவரவரின் சுயவிருப்பம் என்று சொல்லி விட்டு விடலாம். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இலங்கையில் இருந்து கொண்டு இலங்கையின் அனைத்து வளங்களையும் அனுபவித்துக்கொண்டு வேறு ஒரு நாட்டிற்கு ஆதரவு கொடுப்பது ஒரு பக்கம் இருக்க, இலங்கை கிரிகட் அணி வேறு எந்த நாட்டுடன் விளையாடினாலும் இலங்கை அணி தோற்றுவிட வேண்டும் என்ற ஈனத்தனமான என்னத்தை தான் தாங்க முடியவில்லை
அப்படி என்னதான் இலங்கை நாடு எமக்கு அநீதி இளைத்ததோ என்று எனக்கு தெரியவில்லை என்னை பொருத்தவரை வேறு எந்த நாட்டிலும் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்படாத சுதந்திரத்தை இந்த நாட்டில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது
இப்படி செய்வதால் முஸ்லிம்கள் அரபு நாட்டின் இறக்குமதி அவர்களுக்கு இலங்கை மண்ணில் எந்த உரிமையும் இல்லை என்று இனவாதிகள் சொல்வதை உண்மை படுத்துகிறோம், நாம் பாகிஸ்தானில் பிறந்திருக்க வேண்டியவர்கள் எங்களுக்கும் இலங்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பறைசாற்ற நினைக்கிறோமா? என்று என்ன தோன்றுகிறது.
கடிப்பாக ஒரு அணிக்கு ஆதரவு கொடுத்து விட்டு மனதை மாற்றி இன்னொரு அணிக்கு ஆதரவு கொடுக்க உங்கள் மனம் இடம் தாராது என்றாலும் நீங்கள் ஆதரவளிக்காத வேறு ஒரு நாட்டுடன் இலங்கை அணி விளையாடும் போது இலங்கையை ஆதரிக்கலாமே?
ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல செய்தி கடந்த 5-10 வருடங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் எமது முஸ்லிம் சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் மறைந்து இலங்கையை விட்டு நாம் வேறு நாட்டிற்கு ஆதரவு கொடுப்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம் என்பதை புரிந்துகொண்டு இலங்கை அணியின் விசிறியாக இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
தயவுசெய்து இனிமேலும் இந்த நோய்க்கு யாரும் அடிமையாகி விடாதீர்கள் என்பதே எனதுதாழ்மையான கருத்து


0 Comments