.
தற்கொலை எண்ணத்தால் தடுமாறுவோருக்கு பேஸ்புக் வழங்கும் உயிர் காப்பான் தோழன் வசதி!
தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக
வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில்
இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி
வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும்
முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும்
செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்
பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை
உருவாக்கியுள்ளது பேஸ்புக். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில்
எச்சரிக்கை அறிவிப்புகளுடன் போஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்
செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த
போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் செய்யலாம். அதேபோல், அந்த போஸ்டை
பார்ப்பவர்களும் தற்கொலை செய்ய முற்படும் நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.
அவருக்கு ஆதரவாக மற்றொரு பேஸ்புக் நண்பரை தொடர்பு கொள்ளலாம் அல்லது
தற்கொலைக்காக அமைக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனில் கனெக்ட் செய்து ரிப்போர்ட்
செய்யலாம்.
பேஸ்புக் அந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தற்கொலை செய்ய
முற்படும் எண்ணத்தில் உள்ளவருக்கு ஆறுதல் அறிவுரைகளை வழங்கும். அந்த நபர்
மற்றொரு முறை பேஸ்புக்கை லாக் இன் செய்யும் போது ஆட்டோமேட்டிக்காகவே நிறைய
ஆறுதல் செய்திகள் அடங்கிய அழகிய ஸ்கிரீன்கள் அவரது அக்கவுண்ட்டில் டிஸ்பிளே
ஆகும். அதில், ஆலோசனைகள் மட்டுமல்ல, உதவிகள் வாங்குவதற்கு வழிமுறைகளும்
இருக்கும்.
இதுபற்றி வாஷிங்டனிலுள்ள போர்பிராண்ட் சேவை அமைப்பின்
திட்ட மேலாளர் ஸ்டீபன் பால் கூறுகையில், 'தற்கொலைகளை தடுக்கும் இந்த புதிய
வசதி பேஸ்புக்கில் கொண்டு வரப்பட்டது சிறப்பான ஒன்று. ஏனென்றால்,
பேஸ்புக்கில் மட்டுமே எல்லோரும் பயன்படுத்தும் வகையில் 'டூல்ஸ்' உள்ளது.
அது ஒரு பிரண்டாக இருக்கலாம், தாத்தா-பாட்டியாக இருக்கலாம், அலுவலகத்தில்
உடன் பணிபுரிபவராக கூட இருக்கலாம். மனவலியுடன் இருக்கும் ஒருவரை ஆன்லைனில்
கனெக்ட் செய்து அவர்களுக்கு ஆறுதல்களை வழங்க ஒருவர் டிகிரி படித்துவிட்டு
வரவேண்டிய அவசியமில்லை. நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் அந்த நபரின் ரிப்போர்டை ஆய்வு
செய்து அவர்களுக்கு உதவி செய்ய பேஸ்புக்கின் வசதி இருக்கிறது என்பது
மட்டுமே. பலருடைய உயிரை காப்பாற்றும் சக்தி இந்த வசதிக்கு உண்டு.' என்றார்.


0 Comments