இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறப்படவுள்ளதாக சட்டம் மற்றும் நீதி தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் தான் விருப்பம் கொண்டிருந்தாலும், சில அமைப்புக்கள் மற்றும் நபர்கள் அதற்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளதனால், இது தொடர்பில் மக்கள் அபிப்பிராயம் பெறப்படவுள்ளது.
தூக்குத் தண்டனைச் சட்டம் நடைமுறையில் வந்தால், நாட்டில் இடம்பெற்று வரும் பல்வெறு குற்றச் செயல்கள் இல்லாமல் போகும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments