Subscribe Us

header ads

புதிய கல்வி சீர்திருத்தங்களை மத்ரஸாக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்பபோகின்றன?

-Jasar Jawser-

2015 ஆம் ஆண்டிருலிருந்து புதிய கல்வி சீர் திருத்தத்தின் அடிப்படையில் தரம் 6, 10 ஆகியவற்றுக்கான புதிய பாடத்திட்டம், அதற்கான பாடநூல்கள், ஆசிரிய வழிகாட்டிகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விநியோக நிர்வாக சிக்கல்கள் காரணமாக சில பாடசாலைகளுக்கு சில பாடநூல்களும் ஆசிரியர் வழிகாட்டிகளும் சென்றடையவில்லை. ஆனால் அவற்றை விரைவாகப்பெற்றுக் கொள்ள வழிமுறைகள் உள்ளன.

இலங்கையிலுள்ள மத்ரஸாக்களைப் பொறுத்த வரையில் ஒருபெரிய பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பாடசாலைப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கபப்டாத சூழல் நிலவிய போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக சில பிரபல்ய மத்ரஸாக்கள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து மத்ரஸாக்களும் புதிய கல்விச் சீர்திருத்த்தின் கீழான கற்றல் சாதனங்களைப்பெற்றுக் கொள்ளும் முறைமையொன்றினை வலுவாக உணரத் தொடங்கியுள்ளன.

பாடசாலை மாணவர்கள் போன்று மத்ரஸா மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான பொறி முறையொன்று குறித்து மிக அண்மையில் கல்வி அமைச்சின் கலந்துரையாடலொன்றில்பேசப்பட்டது.

கொள்கையடிப்படையில் இலவசமாக இவற்றை விநியோகிக்க உடன்பாடு காணப்பட்டாலும், இதற்கானபொறிமுறை என்ன என்பது இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

மிகப் பிரதான பிரச்சினை என்னவெனில் எத்தனை மத்ரஸாக்களில் எத்தனை மாணவர்கள் பாடசாலைப் பாடங்களைக் கற்கின்றனர் என்கிற குறைந்த பட்சக் கணககே யாரிடமும் இல்லை.

இரு வருடங்களுக்கு முன்னரே குறித்த வருடத்தில் தே வை யான நூல்களின் எண்ணிககை கணிப்பிடப்பட்டு அதற்கேற்ப பிரதி செய்யப்படுகின்றன.
திடீரென எமது மத்ரஸாக்களின் மாணவர்களுக்கான பாட நூல்கள் வேண்டும் எனறு கேட்டால் அரசாங்கம் அல்லது கல்வி அ மைச்சுத் தான் என்ன செய்யும்?

Post a Comment

0 Comments