பொது வேட்பாளர் சமாச்சாரம் இந்தக் கொஞ்சக் காலமாகத்தான் புத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. அது புத்தளத்துக்கு அப்பால் பேசப்படுவதில்லை அல்லது அதிகம் பேசப்படுவதில்லை என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
”நமக்கென ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறல்” என்ற தொனிப் பொருளை நோக்கும்போது எனது மனதில் ஒரு வினா பிறக்கிறது.
”எல்லோரும் ஒருமித்த மனத்தினராய் நமக்கென ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தெரிவு செய்வது அல்லது பாயிஸ் என்ற சர்ச்சைக்குரிய நகர அரசியல் பிரபல்யத்தை வேறு ஒருவரைக் கொண்டு பிரதியீடு செய்வது. இந்த இரண்டில் எது மிகச் சரியானது” இதுதான் எனது வினா.
நமக்கென ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தெரிவு செய்ய உளச் சுத்தியுடன் நாம் எல்லோரரும் ஒன்றுபடல் என்பதுதான் இதன் கருத்தாக இருக்குமானால் அதற்கான பொது வேட்பாளராக பாயிஸ் ஏன் இருக்கக் கூடாது? என்பதும் பாயிஸ் இன்னுமொருவரைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும் என்பதாக இருக்குமானால் அதற்கு என்ன நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதும் ஏலவே நான் கேட்ட கேள்வியைத் தொடரந்து என்னுள் எழும் மற்றுமிரு முக்கிய வினாக்களாகும்.
கையில் வெண்ணயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்?
அரசியல் முன்னனுபவம் இல்லாத ஒரு குழு தனது இலக்கை அடைவதற்காக அடிக்கடி சந்திப்பவர்களின் படங்களை சமுக வலைத்தலங்கள் ஊடாக நாளாந்தம் நாம் காண்கிறேனாம். ஆனால் அந்த அரசியல் பிரபல்யங்கள் ஒரு தேர்தல் கையகல தூரத்தில் இருக்கையில் எவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் என்ற ஆழமான அனுபவம் புத்தளம் அரசியலில் நீண்ட காலமாக இருந்து தொடர்ந்தும் தோல்வியைத தழுவிக் கொண்டோரிடம் இருக்கிறது. இவ்வகையான பிரதேச அரசியல் பிரபல்யங்கள் எப்போதும் பெரும்பாண்மை அரசியல் தலைமைத்துவங்களின் சிறகுக்குள் குளிர் காய்வதைத் தவிர வேறு எதையுமே செய்யத் தெரியாதவர்கள் என்பதை நாம் இங்கு சொல்லியே ஆகவேண்டும்.
எனது பிரேரணை
எனவே நம்பத் தகாதவர்களை நம்பி> வயது முதிர்வு> அரசியல் முன்னனுபவம் இல்லாதவர்களை களமிறக்கி தோல்வியடைவதைத் தவிர்க்க பொது வேட்பாளராக பாயிஸை நிறுத்தும் சாத்தியம் பற்றியே இப்போது சிந்திக்க வேண்டும்.
சமுக கடப்பாடும்> கௌரவமும> நன்மதிப்பும் கொண்ட ஒரு குழு இதில் தலையிட்டு ஒரு நிலைப்பாட்டுக்கு புத்தளம் வாக்காளர்கள் வர ஏதாவது செய்ய முடியுமானால் அதை செய்ய வேண்டும் எனவும்> அந்தக் குழுவே எதிர்காலத்தின் பாராளுமன்றப் பிரதி நிதிக்கும் சமுகத்துக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கக் கூடியதான ஒரு ஏற்பாட்டையும் அவரசமாகச் செய்ய வேண்டும் எனவும்> அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னால் அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் பிரேரிக்கிறேன்.
எனது நியாயப்படுத்தல்
1) பாயிஸின் இரண்டாவது பக்கத்துக்கு நாம் பொறப்பு அல்ல. அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலானது. எனவே திறமை> ஆழுமை என்ற அரவது முதலாம் பக்கத்தை வைத்துக்கொண்டு நாம் பிரயோசனமடைய வேண்டும்.
2) பாயிஸின் இரண்டாவது பக்கத்தால் இந்தத் தொகுதிக்கு எந்த பாதிப்புக்களும் வரவில்லை. மாறாக அவரது முதலாம் பக்கத்தால் பிரதேசம் மிகப் பெரிய நண்மை அடைந்துள்ளது.
3) பாயிஸுக்கெண்று ஒரு கணிசமான வாக்கு வங்கி ஏற்கனவே உள்ளது. அதில் ஏனைய சமுகத்து வாக்குகள் கணிசமாக உள்ளன. ஆனால் புதிகாத அறிமுகப்படுத்தப்படும் அரசியல் தலைமைத்துவம் இனித்தான் அப்படியான ஒரு நிலையை உருக்காக வேண்டும். அதற்காக பல காலங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பிரதேசத்துக்கு நடக்கும் அநியாயங்கள் நடந்து முடிந்திருக்கும்.
4) பிரதேச இளைஞர்கள் நமது தொகுதியில் உள்ள உள்ளுராட்சி அமைப்புக்களின் நிருவாகத்துக்காக இப்போதிருந்தே தயார் செய்யப்பட வேண்டும. அங்கிருந்துதான் அரசியல் அநுபத்தை அவர்கள் படிக்க வேண்டி இருக்கிறது. ஜே.ஆர் . ஜயவர்தன, ஆர் பி ரேமதாச, பவுஸி, எம்.எச். முகம்மட், சந்திரிகா பண்டாரநாயக்க போன்ற பிரபல்யங்களும் ஏன் பாயிஸும் கூட தமது அரசியல் உலகத்துக்கு அந்தப். படிகளின் மூலமே ஏறிச் சென்றாரகள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
5) உலமாக்கள், கல்விமானகளைக் கொண்ட ஒரு மத்தியஸ்த குழு இதில் தலைபோடுமானால் இப்போது பாயிஸில் இருக்கும் விருமப்பத் தகாத இரண்டாம் பக்கத்தை சீர் செய்யக் கூடியதாக இருக்கும்.
இதன் அடிப்படையில் எனது பிரேரணையை கவனத்துக்கெடுக்குமாறு புத்தளம் மக்களை வேண்டுகிறேன்.


0 Comments