Subscribe Us

header ads

புத்தளம் வாக்கெடுப்பு பிரிவு 32 ற்கான செயற்குழு நிறுவப்பட்டது



25 வருட காலமாக புத்தளம் மாவட்டம் இழந்துவந்துள்ள சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துக்கின்ற PPAF இன் முயற்சியின் செயற்பாடான ஒவ்வொரு வாக்கெடுப்பு பிரிவு பிரதேச மக்களை இந்த பணியில் உறுதி படுத்தும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் தொடரில் புத்தளம் நகர வாக்கெடுப்பு பிரிவு 32 ற்கான செயற்குழு நிறுவப்பட்டது. இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை(27.02.2015) KEC நிறுவனத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த அரசியல் விழிபுணர்வினூடாக மக்கள் சக்தியை உருவாக்குதல், ஒவ்வொரு பிரதேச பிரிவுக்கும் செயற்குழு உருவாக்குதல், அதிலிருந்து புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகலை நிறிவேற்றுகின்ற பொறுப்பு கூறக்கூடிய தலைமைத்துவ சபையை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் விரிவாக தெளிவு படுத்தப்பட்டன.

அத்துடன் எதிவரும் பாராளமன்ற தேர்தலில் புத்தளம் தொக்குதிக்கான பிரதிநிதியை பெற்று கொள்ளக்கூடிய வழிமுறைகள் கலந்துறையாடப்பட்டன.
இவ்வேலைத் திட்டத்திணை வலுப்படுதுவதற்கு, அப்பிரதேச மக்களால் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. மற்றும கேள்வி பதில்கள் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அப்பிரதேச சகோதரர்கள் மிக மிக ஆர்வத்துடன் PPAF உடன் இணைந்து செயல்பட முன்வந்தனர்.




ஊடகப்பிரிவு
-PPAF- 

Post a Comment

0 Comments