Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்: வட்டரக்க விஜித தேரர்


நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என வட்டரக்க விஜித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தேர்தல் ஒத்திவைப்பு குறித்த உத்தியோகப்பூர்வ கோரிக்கை இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் பெய்துவரும் அடை மழை மற்றும் வெள்ளத்தினால் சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வட்டரக்க தேரரின் ஆதரவு யாருக்கு என்பது குறித்தும் இன்று அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments