புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் (PPAF) அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்களை சந்திக்கும் திட்டத்திற்கு அமைய, 2015.02.04 ஆம் திகதி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC) தலைவர் அமைச்சர் ரிஷாத் பத்யுத்தீன் அவர்களை சந்தித்தது. இச் சந்திப்பின் போது PPAF-யின் செயற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சுமுகமான கலந்துரையாடலாக நடைபெற்ற இச் சந்திப்புக்கான ஒருங்கிணைப்பை புத்தளம் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஆர். அலி சப்ரி மேற்கொண்டிருந்தார்.





0 Comments