Subscribe Us

header ads

இனவாதத்திற்கு எதிராக மைத்திரியும், ரணிலும் வீதிக்கு இறங்குகிறார்கள்


இனவாதத்திற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். சில தரப்பினா நாட்டுக்குள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த எதிர்ப்பு போராட்டப் பேரணி நடத்தப்பட உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த பேரணியில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

சில தரப்பினர் சில ஊடகங்களையும் இணைத்துக் கொண்டு மீண்டும் நாட்டில் இனவாதத்தை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இனவாதத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்தப் போராட்டத்திற்கு ஆயத்தமாகுமாறு ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.

Post a Comment

1 Comments

  1. A most important action to take without further delay. If not it will grow high, spread all over like cancer, and it poision the minds of the innocent people. This dirty game will keep this country in a mess again.

    ReplyDelete