Subscribe Us

header ads

மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..

சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக வருகின்றது. உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் வெடிக்கின்றது,

சில இடங்களில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன. மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று  பாருங்கள்..  


பேட்டரி :

பேட்டரி எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சார்ஜர்:

மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும், போலி மொபைல் சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை செலுத்தும் இதனால் சில சமயங்ளில் போன் வெடிக்கும்.

மொபைல் போன்:     


மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்

சார்ஜ் போன்:


சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

ஈரம் :

போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது

பேட்டரி:

 பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.

சார்ஜ்:


போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.

சூடு :

 பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்

வழிமுறைகள்:

 மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.

பேட்டரி:

அதிக பட்சம் போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது போலி நிறுவனங்களின் கருவிகள் தான், முடிந்த வரை அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 

Post a Comment

0 Comments