ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
கட்சியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் அறிவித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கட்சியின் ஆலோசகர்களாக இவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதமர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க தி.மு.ஜயரட்ன மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய செயற்குழுவின் முழு விபரம்:
தலைவர்: மைத்திரிபால சிறிசேன
ஆலோசகர்கள்: சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ரத்னசிறி
விக்ரமநாயக்க, தி.மு.ஜயரட்ன, அலவி மௌலானா
பொதுச் செயலாளர்: அநுர பிரியதர்ஷன யாப்பா
பொருளாளர்: எஸ்.பி.நாவின்ன
தேசிய அமைப்பாளர்: சுசில் பிரேமஜயந்த
சிரேஷ்ட பிரதித் தலைவர்கள்: நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்தன, ஏ.எச்.எம்.பௌசி, ஜனகா பண்டார தென்னகோன்
பிரதி தலைவர்கள்: ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திசாநாயக்க, பியசேன கமகே,
எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன


0 Comments