Subscribe Us

header ads

முதலமைச்சு வழங்குவதற்கு ஆராயப்பட்ட சாதகமான காரணிகள்



முதலமைச்சர் விடயத்தில் ஆரம்பத்தில் மு.கா மாகாண சபை உறுப்பினர்களான மன்சூர்,ஜெமீல்,நஸீர் ஹாபிஸ் ஆகிய மூவரும் அதிகம் கட்சியினால் கவனத்திற் கொள்ளப்பட்டப் போதும் இறுதிப் பட்டியலில் தவமும் வந்து இணைந்து கொண்டார்.

கடந்த மாகாண சபையில் வழங்கப்பட்ட அமைச்சினைத் தவிர அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா இனால் சம்மாந்துறை ஊரானது பதவி ரீதியாக எச் சந்தர்ப்பத்திலும் பலப்படுத்தப்படாமையினால் சம்மாந்துறை மக்களினை பதவி விடயத்தில் திருப்திப்படுத்தவும்,கட்சியின் சிரேஸ்ட அடிப்படையில் மன்சூர் முதல் இடத்தில் இருந்தமையும்,சம்மாந்துறையினை மையப்படுத்தி அமைச்சர் ஹக்கீம் தேர்தல் கேட்கும் எண்ணத்தில் இருந்தமை போன்ற காரணிகள் மன்சூரிற்கு முதலமைச்சு வழங்கபடுவதற்கு ஆராயப்பட்ட சாதகமான காரணிகளாக இருந்தன.

மு.கா இனது இருப்பிற்கு மிகவும் காத்திரமான பங்களிப்பினைச் செய்த ஊர்களில் முதன்மை இடத்தினைப் பிடித்துள்ள சாய்ந்தமருதினை அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா இது வரை எது வித பதவிகளினையும் வழங்கி அழகு பார்க்காமை,அண்மையில் வழங்கப்பட்ட அமைச்சானது சில நியாயமான காரணங்களின் அடிப்படையில் கல்முனைத் தொகுதி இற்கு வழங்க வேண்டி இருந்தும் புறக்கணிக்கப்பட்டிருந்தமை,மாகாண சபையில் இரு தடவை தேர்வான அனுபவமிக்க ஒருவர் போன்ற காரணிகள் ஜெமீலிற்கு முதலமைச்சு வழங்கபடுவதற்கு ஆராயப்பட்ட சாதகமான காரணிகளாக இருந்தன.

அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாவின் கோட்டைகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்திருப்பதால் தவத்தினை பதவி கொண்டு பலப்படுத்தும் போது அதாவுல்லாவினை ஆட்டத்தினைக் குறைக்கலாம் என்ற சிந்தனை தவத்திற்கு முதலமைச்சு வழங்கபடுவதற்கு ஆராயப்பட்ட சாதகமான காரணிகளாக இருந்தன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் அம்பாறை.திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் அமைச்சு,பிரதி அமைச்சு வழங்கி இருந்தமையினால் தற்போது வருகின்ற இப் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படல் வேண்டும் என்ற சிந்தனை, கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூதினை முகம் கொடுக்க மட்டகளப்பு மாவட்டம் பதவி கொண்டு பலப்படுத்தப்படல் வேண்டும் என்பதாலும்,இருப்பவர்களுள் கல்வித் திறமை போன்றவற்றினை ஆராய்ந்து பார்க்கும் போது இவர் முதன்மை நிலை பெற்றமை போன்ற காரணிகள் நசீர் அஹ்மதிற்கும் முதலமைச்சு வழங்கபடுவதற்கு ஆராயப்பட்ட சாதகமான காரணிகளாக இருந்தன.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.

Post a Comment

0 Comments