Subscribe Us

header ads

மஹிந்த என்ற காய்ச்சலுக்கு வைத்தியம் செய்த நாம் மைத்ரியின் பின் வரவுள்ள மாரடைப்புக்கு என்ன செய்யபோகிறோம் ???


கடந்த ஜனாதிபதி  தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருந்த சிறுபான்மையினர் மைத்ரியின் வெற்றியின் பின்னர் ஏற்படபோகும் தேர்தல் முறை மாற்றத்தின் பின்னணியில் எமக்கு உள்ள சவால்களை பற்றி சிந்திக்க தவறிவிட்டோம்.

ஜனாதிபதி   மைத்ரியின் தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதுனூடாக  சிறுபானமையினருக்கு உள்ள பிரதிகூலங்கள் தொடர்பாக நடந்து முடிந்த தேர்தல் சமயத்தில் பலர் எமக்கு தெளிவடுத்த முயற்சி செய்தனர்.அதில் மிக முக்கியமானவர் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பொது செயலாளர் வை எல் எஸ் ஹமீத்.

ஜானாதிபதி மைத்ரியின் தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச  தேர்தல் முறை ஒட்டுமொத்த சிறுபான்மையினரினதும் வாக்குகளை குப்பையில் போடும் ஒரு முறை என்பதை நாம் அப்போது அறிந்துவைத்திருந்தாளும் மஹிந்தவை வீட்டுக்க அனுப்பவேண்டும் பொதுபலசேனாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த ஒரே காரணத்தினால் மைத்ரியின் வெற்றிக்கு பின்னால் வரப்போகும் தேர்தல் முறை மற்றம் ஊடாக் எமக்கு உள்ள ஆப்பை பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

தற்போது நடைமுறையில் உள்ளது 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் முறையாகும் இந்த முறையில் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதிகபடியான வாக்குகளை எடுக்கும் நபர் வெற்றிபெற்றவாராக அறிவிக்கப்படுவார்.

ஆனால் மைத்ரியின் தேர்தல் விஞ்சபனத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள மாற்றத்துக்கு உற்படுத்தப்படவுள்ள தேர்தல் முறை முன்னர் இருந்த தொகுதிவாரியான தேர்தல் முறை இதில் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துகொள்ளப்படமாட்டது இலங்கயில் உள்ள தேர்தல் தொகுதிகள் 168ல் அதிகபடியான தேர்தல் தொகுதிகளில் வெற்றிபெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொகுதிவாரியான முறையில் நடைபெற்றிருந்தால் நூறு தொகுதிகளில் வெற்றி பெற்ற மஹிந்தவே வெற்றியாளர்.சிறுபான்மை மக்களின் வாக்குகள் குப்பையில் இடப்பட்டிருக்கும்.

தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு   ஜனாதிபதிக்கு இருந்த அதிகப்படியான அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படவுள்ளது வரும் பொது தேர்தல் நடப்பில் உள்ள தேர்தல் முறைமையிலே நடத்தப்பட உள்ளது என்றாலும் இரண்டு வருடங்களின் பின்னர் தொகுதிவாரியான தேர்தல் முறையை  அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொகுதி முறையில் தேர்தல் ஒன்று இடம்பெறும் சந்தர்பத்தில் முஸ்லிம்கள் அதிகபட்சமாக கிழக்கில் இருந்து அருவரையும் கொழும்பு மத்தியில் இருந்து ஒருவர் கண்டி ஹரிஸ்பத்துவ தொகுதியில் இருந்து ஒருவர்  என எட்டு அதிகபட்சமாக பத்து உறுப்பினர்களையே பாராளுமன்றம் அனுப்ப முடியும் அது தவிர பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பிரதான கட்சிகள் மட்டுமே ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அதேவேளை அவர்கள் ஆட்சியின் பங்காளர்களாகவும் இருக்கமாட்டார்கள்.

எமது துரதிஸ்டவசம்  எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வரும் பொது தேர்தலில் கூட்டணி அமைக்க பேரம்பேசும் போது அமைச்சு பதவிகளை உயர்ஸ்தானிகர் பதவிகளை தேசிய பட்டியல்களை மட்டுமே முன்னிறுத்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் பேரம் பேசியிருப்பர்களே தவிர தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஆக்கபூர்வமாக ஏதும் கோரிக்கைகளை முன்வைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் எமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக ஆக்கிவிடும் இந்த ஆபத்து தொடர்பாக நாம் களம் அமைத்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.தேசிய ரீதியில் உள்ள அரசியலமைப்பு தொடர்பாக தேர்ச்சி பெற்றவர்களை புத்திஜீவிகளை அரசியல் தலைமைகளை ஒன்று திரட்ட இன்றே களத்தில் இறங்க வேண்டும் .-Madawala News-

Post a Comment

0 Comments