உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய கடன்தொகை மற்றும் நிவாரணம் எவ்வாறு செலவாகியது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் உலக வங்கியிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தின் போது தாம் இந்த கோரிக்கையை விடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியின் போது உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய நிவாரணம் மற்றும் கடன் தொகையை நீர் போல விரயம் செய்துள்ளனரா அல்லது குறித்த பணத்தொகையை கையாடல் செய்துவிட்டார்களா என்பது குறித்ததே அவர் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளார்.
மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற களவு, மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


0 Comments