Subscribe Us

header ads

இலங்கையில் 5000 இற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்


இலங்கையில் 5 ஆயிரத்து 26 போலி வைத்தியர்கள் காணப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆய்விற்காக 22 ஆயிரத்து 313 வைத்தியர்களை உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

வடக்கு, மேல், தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாகாண ரீதியாக நோக்கும்போது, வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான போலி வைத்தியர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஐந்து மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள போலி வைத்தியர்களில் 32.5 வீதமானவர்கள் வடமாகாணத்திலேயே காணப்படுகின்றனர் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் ஐந்து மாவட்டங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வைத்தியர்களில் சராசரியாக ஐவரில் ஒரு வைத்தியர் போலியானவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை போலி வைத்தியர்களை கைதுசெய்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருடகால சிறைத்தண்டனையாவது விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரிடம் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments