Subscribe Us

header ads

நபிகளின் பாலியல் கவர்ச்சியை வர்ணிப்போம்.. இஸ்லாமிய பத்திரிகை அறிவிப்பு


நெதர்லாந்தின் இஸ்லாமிய பத்திரிகை ஒன்று முகமது நபிகளின் பாலியல் கவர்ச்சி குறித்த சிறப்பு பதிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மோசிம்கிராட் (Moslimkrant) என்ற அந்த பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பிராஹிம் பூரிக் (Brahim Bourzik)கூறுகையில், பாரிசில் சார்லி ஹெப்டோ இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து இஸ்லாம் குறித்து பரவியிருக்கும் பொதுவான தவறான புரிதல்களை மாற்றும் நோக்கில் இந்த பதிப்பு ஒரே ஒரு முறை வெளியிடப்படவுள்ளது.
இதில் வழக்கத்துக்கு மாறான இறைதூதர் நபிகளின் ஆளுமை குறித்த மற்றுமொரு பகுதியான அவரது பாலியல் கவர்ச்சி வர்ணிக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளுக்கு, மதத்தின் உண்மையான செய்தியை பற்றிய நல்ல புரிதலைத் தரவேண்டிய பொறுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இச்சிறப்பிதழ் ரமலான் நோன்பு மாதத்தை ஒட்டி வரும் யூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என அதன் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments