கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் என்று கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட நபரொருவரைக் கண்டறியும்விதத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்வியமைச்சர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட நபரொருவர் அண்மையில் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் விமல் குணரத்னவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து விமல் குணரத்ன, கல்வியமைச்சை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அது போலியான நபர் ஒருவர் மேற்கொண்ட அழைப்பு என்பது தெரியவந்துள்ளது.
இப்படியான போலியான தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும், பாடசாலைகளுக்கு இப்படியான அழைப்புகள் வந்தால், அதனை உடனடியாக உறுதிப்படுத்துமாறும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேட்டுக்கொண்டுள்ளார்.


0 Comments