நுவரெலியாவில் காணப்படும் உலக முடிவு எனும் இடத்தில், மலையிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாகிய நெதர்லாந்தைச் சேர்ந்தவரை மீட்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் சுதேஷ் லலிந்தவுக்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுதேஷ் லலிந்த உட்பட இந்த வீர தீரச் செயலில் பங்கெடுத்த குழுவுக்கும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் டபிள்யு.ஜே. ஸீ.த. சில்வா இந்தப் பதவியுயர்வுகளை வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments