புத்தளம் - மன்னார் (பழைய) பிரதான வீதியின் பல இடங்கள் ழுதடைந்துள்ளது. அதிகமான வடிகான் போக்குகள் உடைந்துள்ளதுடன் கிரவல் வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த அரசாங்கத்தினால் புத்தளம் முதல் எலுவன்குளம் வரை நிருமாணிக்கப்பட்ட காபட் வீதியும் பல இடங்களில் உடைந்து (கரைந்து) போயுள்ளது.
எலுவன்குளத்திலிருந்து கலா வாவியின் நீர் பாய்ச்சல் வரை போடப்பட்ட கொன்கிறீட் வீதியின் பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் பெய்த மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இவ் வீதி பழுதடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments