Subscribe Us

header ads

காரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி!


"அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி எனக்கு நானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.”

-கராத்தே வீரர் ஹூசைனி

முதலில் கால்களில் ஆணியை ஹூசைனி அடித்துக் கொண்டார். பின்னர் அவரது மாணவர்கள், ஹூசைனியின் மற்றொரு கையில் ஆணியை அடித்தனர். பின்னர் இரண்டு கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டது. இதையடுத்து சிலுவை நேராக தூக்கி நிறுத்தப்பட்டது.

முதல்வரிடமிருந்து இதன் மூலம் பிறகு காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று எடுத்த நாடகமே இந்த முடிவு. ஷியா முஸ்லிமான ஹூசைனி இப்படி கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வது நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. என்றோ இறந்து போன நபிகளின் பேரனின் நினைவாக இன்றும் தங்கள் உடம்பை கீறிக் கொண்டும், ரத்தத்தை வெளியாக்கிக் கொண்டும் இருக்கும் ஷியாக்களின் மூட கொள்கையையே ஹூசைனியும் பிரதிபலிக்கிறார்.

இவர் தனது தவறை திருத்திக் கொண்டு நேர் வழி பெற பிரார்த்திப்போம். இந்த கிறுக்குச் செயலை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். இது போன்ற கிருக்கர்களை அந்த இடத்திலேயே காட்டமாக கண்டித்து அறிக்கை விட்டால்தான் மூடப் பழக்கங்கள் சமூகத்தில் குறையும்.



உயிருக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்: ஹுசைனிக்கு ஜெயலலிதா அறிவுரை





ஜெயலலிதா| கோப்புப் படம்


கராத்தே வீரர் ஹுசைனிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், தன்னைத்தானே வருத்திக் கொள்ளும், உயிருக்கு உலை வைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்பதற்காக கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டு 7 நிமிடங்கள் இருந்தார்.

இந்நிலையில் ஹுசைனிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், "அன்புக்குரிய ஹுசைனி, தடைகளைத் தகர்த்து தமிழக முதல்வராக நான் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக சிலுவையில் அறைந்து கொள்ளும் வலி மிகுந்த காரியத்தைச் செய்துள்ளீர்கள். உங்கள் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன். அதே வேளையில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், என் நலன் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. உங்கள் நலன் மீதும் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்துகிறேன். இதுபோன்ற உயிருக்கு உலை வைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.



Thanks by சுவனப் பிரியன் 

Post a Comment

0 Comments