Subscribe Us

header ads

இப்ப கொஞ்ச நாளாவே பக்கத்திலேயே ஒரு வைத்தியரை வைத்திருப்பது நல்லது என்று தோணுது...

அரசியலை பற்றி கதைக்கவும் முடியலே, கதைக்காமல் இருக்கவும் முடியலே.



சில அரசியல் வாதிகளின் செயல் பாடுகளை பார்க்கும் போதும், அறியும் போதும் அருவருப்பாய் இருக்கும் அதே நேரம் ப்ரெசரும் ( அழுத்தம்) கூடுகிறது.



தங்களின் சுய நலன்களுக்காய் சமூகத்தை அடமானம் வைக்கிறார்கள்.. ஆனாலும் இவர்கள் பசு தோல் போர்த்திய புலிகள் என்று தெரியாமல் மக்கள் இவர்களை தோளில் சுமப்பது தான் வேதனை.


மக்கள் மாறாத வரை இந்த கேடு கேட்ட, சுயநலமும், குறுகிய நோக்கமும் கொண்ட அரசியல் வாதிகள் சமூக காவலன்,தியாகி, ஏழைகளின் பங்காளன் என்ற பெயர்களிலெல்லாம் நம் மத்தியில் வலம் வரத்தான் செய்வார்கள்.


இதற்கு மாற்று வழி என்ன? தொடர்ந்தும் கை கட்டி பார்த்து கொண்டிருப்பதா? இந்த 'நக்கி தின்னிகளுக்கு' சமூகத்தை தாரை வார்ப்பதா?

என்பதை சிந்திக்கும் கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.


சிந்திப்போம்.. ஒன்று படுவோம்.

-Mohamed Infas-

Post a Comment

0 Comments