Subscribe Us

header ads

30,000 மெட்ரிக் தொன் தரக்குறைவான டீசல் திருப்பி அனுப்பப்பட்டது

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் தொன் தரக்குறைவான டீசல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் கொள்வனவு செய்யப்பட்ட டீசல் தொகையே நேற்று திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளால் சுத்திகரிப்பின் போது குறித்த டீசல் தரக்குறைவானதென உறுதி செய்யப்பட்டதாக பாலித ரங்கேபண்டார தெரிவித்தார்.

Post a Comment

0 Comments