Subscribe Us

header ads

மகிந்தவை இராவணனுடன் ஒப்பிடும் விமல் வீரவன்ஸ


கடந்த ஜனாதிபதித் தேர்தல் இராமன் மற்றும் இராவணனுக்கு இடையிலான போரை போன்றது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இராவணன் எப்படியான பலமிக்கவராக இருந்தாலும் இராமனால், இராவணனை தோற்கடிக்க முடிந்தது.

இராவணனின் அணியில் இருந்து சில காட்டிகொடுப்புகள் காரணமாகவே இராவணன் தோல்வியடைந்ததாக இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக விபிஷணன் போன்றவர்கள் இதற்கு காரணமாக இருந்தனர்.

இல்லாவிட்டால் இதனை 1815 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று நிகழ்வாக இதனை கருத முடியும். கண்டி மேல் நாட்டு மேட்டுக்குடியினர், ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்ற, நாட்டின் கடைசி மன்னரை காட்டிக்கொடுத்தனர் எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments