Subscribe Us

header ads

ஷிரந்தி மீதான குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகள் இல்லை!– அஜித் ரோஹன


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு தொடர்பில்  இதுவரை பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

ஷிரந்தி ராஜபக்ச, சிரிலிய சவிய என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று நடத்தியமை மற்றும் போலி அடையாள அட்டைகளை விநியோகித்து வங்கி கணக்குகளை ஆரம்பித்தமை சம்பந்தமாக பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மக்கள் வங்கியின் அதிகாரியினால் தகவல்கள் வெளியாகிதன் பின்னரே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

வங்கி அதிகாரியின் தகவலில் ஷிரந்தி ராஜபக்சவின் 222222222v என்ற இலக்கம் கொண்ட அடையாள அட்டை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பி்டத்தக்கது.

Post a Comment

0 Comments