தற்போதைய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின்படி எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதும் போக்குவரத்துக் கட்டணங்கள்; சில பகுதிகளில் குறைவடையவில்லை என சமூக அபிவிருத்திக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அகமட் மனாஸ் மக்கீன்; தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக தொழில்ச்சங்கங்கள் செயற்படுவதில்லை, விலை குறைப்புக்கு ஏற்ப மக்களிடம் இருந்து பணத்தினை அறவிடுவதில்லை மற்றும் தற்போது பொதுமக்களின் வருமானங்களையும், வாழ்க்கைச் செலவீனங்களையும் கருத்திற் கொண்டு பேரூந்துகளுக்கான கட்டணம், ஆட்டோக்களின் கட்டணங்ளை குறைத்து சாரதிகள் சேவையில் ஈடுபடுவதற்கு தொழில் சங்கங்கள் வழிகாட்ட தவறிவிடுகின்றார்கள். இதன் காரணமாக மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் உரிய நேரத்தில் சென்றடைவதில்லை.
நல்லாட்சியின் வளர்ச்சிக்கு தொழில்ச்சங்கங்களின் பங்களிப்பு மிக அவசியம் ஆகும் . மக்களின் நலனில் அக்கறை காட்டுகின்ற சங்கங்களாக தொழில்ச்சங்கங்கள் மாறாதவரையில் எமது மக்களின் வாழ்கைச் செலவினைக் குறைக்க முடியாது எனவும் தெரிவித்தார்

0 Comments