லண்டனை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் தர விமான நிலையமாக மாறிய துபாய் !
எண்ணெய் வளத்திலும், செல்வச் செழுமையிலும் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் துபாய், சத்தமில்லாமல் இன்னொரு மகத்தான சாதனையையும் தற்போது நிகழ்த்தியுள்ளது. அதிநவீன கட்டிடக் கலைவண்ணம், பசுமையான சுற்றுப்புறம், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வளாகம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த (2014) ஆண்டில் சுமார் 7 கோடியே 4 லட்சம் பயணிகள் வந்து சென்றதன் மூலம் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பை இதுவரை தக்கவைத்திருந்த லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதே காலகட்டத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தின் வழியாக சுமார் 6 கோடியே 81 லட்சம் பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இதை வைத்து பார்க்கையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த வளர்ச்சி கடந்த (2013) ஆண்டைவிட 6.1 சதவீதம் அதிகம் என தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு சுமார் 7 கோடியே 90 லட்சம் பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 9 கோடியை தொடலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
0 Comments