கருத்தடை மாத்திரை பெண்களுக்கானது என்பதை மாற்றும் முனைப்பில் முழுமூச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.
அங்கு சோதனை செய்யப்பட்டு வரும் இரண்டு திட்டங்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை உருவாக்கி வருகிறது. ஒன்று, எச்-2 காமண்டசோல். இதன் வேலை ஆணின் விந்துவை முழுவளர்ச்சி அடைய விடாமல் செய்வது. “விந்து இல்லை என்றால் கருமுட்டை உடையும் வாய்ப்பில்லை. எனவே கருத்தரிப்பும் இருக்காது” என்கிறார் கன்சாஸ் பல்கலைகழகத்தில் இந்த ஆராய்ச்சியை செய்து வரும் உயிரியல் நிபுணரான ஜோசப் டாஷ். இவர் இதற்காக 2001-ம் ஆண்டிலிருந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆய்வு, இதை விட ஒரு படி மேலே செல்லும் ஜேக்யூ1, இதன் வேலை உடல் விந்தணுவை உற்பத்தி செய்யாத வகையில் தற்காலிக மறதியை உருவாக்குவது. ஹார்வர்டில் உள்ள டானா-பார்பர் புற்றுநோய் கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஜே ப்ராட்னர், இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். தனிமையில் விடப்பட்ட இரண்டு எலிகளின் மூலம் இந்த சோதனை செய்யப்பட்டு அவற்றிற்கு எந்த கருத்தரிப்பும் நிகழவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாத வண்னம் இந்த மாத்திரையை உருவாக்குவதில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவத்துறையின் அனுமதியுடன் இன்னும் சில வருடங்களில் இந்த மருந்து சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments