Subscribe Us

header ads

ஐரிஎன் தொலைக்காட்சி பணிப்பாளா் சுதர்மன் ரதலியகொட பிணையில் விடுதலை!


ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் செய்திப் பணிப்பாளர் சுதர்மன் ரதலியகொட இன்று பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்.

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில், கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே அவரை விடுவித்தார். ஏற்கனவே பல மோசடி குற்றச் சாட்டுகளுக்காக கடுவளை நீதிமன்றத்தினால் பிடியாணை இவருக்கெதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தும்  மஹிந்த ஆட்சிக் காலத்தில் இவரை பொலிஸாா் கைது செய்யவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் மைத்திாிபாலவுக்கு எதிராக பொய் செய்திகளை ஒளிபரப்பிய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பில் நடைபெற்ற போது இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments