Subscribe Us

header ads

நுகேகொடை கூட்டம் சுதந்திரக் கட்சியின் கூட்டமல்ல: அனுர பிரியதர்ஷன யாப்பா


மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் அரசியலில் அனாதைகளாக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவர்கள் இணைந்து எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடந்தும் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்து கொள்ளாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரிதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இணைந்து அந்த கூட்டத்தை நடத்துவதாகவும் அதில் தமது கட்சி கலந்து கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தோல்வியடைந்த ஜனாதிபதியை மீண்டும் பிரதமராக்கும் முயற்சிகளோ, கோரிக்கைகளோ சுதந்திரக் கட்சிக்குள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments