ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால வெற்றிக்காக தன்னால் நிறைவேற்றக் கூடிய கடமைகள் யாவற்றையும் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் கட்சி உறுப்பினர்களை கைவிட்டு செல்ல மாட்டேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளருக்கு மகிந்த அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்திற்கு மகிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
அத்தியாவசிய கடமைகள் பலவற்றினால் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதியினால் கட்சி செயலாளருக்கு கடிதம் மூலம் மகிந்த ராஜபக்ச தெரியபடுத்தியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலவீனமாவதற்கான காரணம் கட்சிக்குள் இருந்த ஒற்றுமை உடைந்தமையே எனவும் கடந்த கால அனுபவங்கள் மூலம் புரிந்துகொள்ள கூடியதாக இருந்ததாகவும் அவர் மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


0 Comments