விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரிசி, பால், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு நிர்ணய விலை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே அவ் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என, காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று பலரின் கேள்வியாக இருப்பது ஏன் அரிசி விலை குறைக்கப்படவில்லை என்பதாகும். விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் அரிசி விலையை குறைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அத்தியாவசிய 10 பொருட்களின் விலை குறைக்கப்பதாகவே வாக்கு கொடுத்தோம் எனினும் 13 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
அரிசி விலை குறைக்காமைக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments