1. நான் கலந்துகொள்ளும் விழாக்களுக்கு சிறுவர்களை (பாடசாலை மாணவர் உட்பட) ஈடுபடுத்துவதை அனுமதிக்க மாட்டேன். (முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்).
2. தேசிய ரீதியாக முக்கியத்துவம் பெறாத எந்தவொரு விழாக்களிலும் கலந்துகொள்ள மாட்டேன்.
3. நான் பயணம் செய்யாத எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது குடுபத்தாருக்கு ஹெலிகொப்டர்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.
4. கோட்டை (கொழும்பு) உட்பட எந்தவொரு பிராந்திய ஜனாதிபதி மாளிகைக்கும் போக மாட்டேன். அவை பராமரிப்பது தொடர்பாக அமைச்சரவையுடன் கலந்துரையாடவுள்ளேன்.
5. ஜனாதிபதி மெய்ப் பாதுகாப்பாளர்கள் 4000 படை அணியை 1000-மாக குறைப்பேன்.
6. பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் விதமாக வாகனத் தொடரணியை பாவிக்க மாட்டேன்.
நன்றி -The Puttalam Times-


0 Comments